கல்விசார் உழியரை கௌரவித்த மட்டு.இந்துக்கல்லூரி: நெகிழ்ச்சியான செயல்...............
மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் கடந்த ஐந்து வருடங்களாக கல்விசாரா ஊழியராக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ரவி தியாகேந்திரன் அவர்கள் ஓய்வு நிலைக்கு செல்வதை அதிபர், ஆசியர்கள், மாணவர்கள், பாடசாலை சமூகம் என அனைவரும் அணி திரண்டு பாராட்டிய சம்பவம் பலரது மனங்களையும் நெகிழச் செய்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக தமது அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன், கல்லூரி வளாகத்தில் சேவையாற்றிய இந்த பரிச்சயமன முகம் 07.08.2024ல் இருந்து விடைபெற்றுச் செல்கின்றது.
இவரின் அயராத சேவை கல்லூரிக்கு, இந்த 05 ஆண்டுகளில் இருந்துள்ளது. பாடசாலையில் அனைத்து விடயங்களையும் மனம் கொனாது புன்னகையுடன்பணியாற்றிய சேவையாளன், அவரது காலடிச் சுவடுகளின் எதிரொலிகள் தாழ்வாரங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கும், அவருடைய விலைமதிப்பற்ற பங்களிப்பை நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கும். இவ்வாறு மதிப்பு மிக்க சேவையாளனை மட்டக்களப்பு இந்துக்கல்லூரி பெரிய அளவில் பாராட்டியுள்ளது.
தற்காலத்தில் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், அதிபர்களை கூட கௌரவிக்காத போதிலும் ஓர் கல்விசாரா ஊழியரை இவ்வாறு கௌரவித்திருப்பது பலருக்கும் நெகிழ்ச்சியான சம்பமாகவுள்ளது.
Comments
Post a Comment