மட்டக்களப்பில் பாதுகாப்பான புலம் பெயர்தல் தொடர்பான விழிப்புணர்வு ......

 மட்டக்களப்பில் பாதுகாப்பான புலம் பெயர்தல் தொடர்பான விழிப்புணர்வு ......

மட்டக்களப்பில் பாதுகாப்பான புலம் பெயர்தல், தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  (01) திகதி இடம் பெற்றது.


இந் நிகழ்வில்  நியுசிலாந்து தூதுவராலய உயர் அதிகாரி பிரஷ்சி கலந்து கொண்டார்.  மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் இடம் பெயர்வு கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தினரால்  (ICMPD) சமுதாய  மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்  நியுசிலாந்து நாட்டின் நிதி உதவியின் கீழ் இந் நிகழ்வு இடம் பெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச மனித கடத்தல் தினம் யூலை 30ம் திகதியை  நினைவு கூறும் முகமாக இளைஞர்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்வு  இடம் பெற்றது.

மனித கடத்தல், மனித வியாபாரம், சட்டவிரோத புலம்பெயர்தல், கடல்வழியாக ஆட்கடத்தல்,  போன்ற பாதுகாப்பற்ற சட்டவிரோத பயணங்களால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி இதன் போது   விரிவாக விளக்கங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  நவருபரஞ்சினி முகுந்தன், 243 படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர்  சந்திம குமாரசிங்க, பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன், உதவி பிரதேச செயலாளர்கள், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் பண்டார, இடம் பெயர்வு கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதே மையத்தின் இணைப்பாளர் எம்.ஏ.எம். மலிக், முப்படை உயர் அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பான விழிப்புனர்வூட்டும் ஸ்டிக்கர்கள் வாகனங்களில் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.











Comments