மட்டக்களப்பில் போடியார் திரைப்படம் ஊடக சந்திப்பு .............

 மட்டக்களப்பில்போடியார் திரைப்படம் ஊடக சந்திப்பு .............

 மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசத்தையும், வாழ்வியலையும் மையப்படுத்தி "Visual Art Movies" நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ள 'போடியார்' திரைப்படம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு  வியாழக்கிழமை (01)  மட்டக்களப்பு, கல்லடி கிறீன் கார்டன் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.


இதன் போது "Visual Art Movies" நிறுவனம் இலங்கைத் தமிழ் சினிமாவை வர்த்தக ரீதியாக வளர்ப்பதுடன், எமது மொழி, கலை மற்றும் கலாசாரங்களைப் பாதுகாப்பதற்கும், இளம் கலைஞர்களை ஊக்குவிப்பதற்கும் செயற்படும் வகையில் ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

போடியார் திரைப்படத்தை குடும்பநல வைத்திய நிபுணர் பேராசிரியர் க.அருளானந்தம், கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானபீட சிரேஷ்ட தயாரிப்பாளர் சதா சண்முகநாதன் மற்றும் 'விசுவல் ஆர்ட் நிறுவன உரிமையாளர் ப.முரளிதரன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர்.

இவ் மண்வாசனையை வெளிக் கொணரும் திரைப்படத்தில் ஜனா, ஜே.ஜே.நெலு, கிரேஸ், சுஜானி உட்படப் பலர் நடித்துள்ளனர். ப.முரளிதரன் அவர்களால்  கதை,  திரைக்கதை, வசனம் எழுதப்பட்டு, கோடிஸ்வரன்  அவர்களாள் இயக்கியுள்ளார். புஷ்பகாந்த்  படப்பிடிப்பு, எடிட் பணிகளை கவணிக்க, இசையை AT.சங்கர்ஜன் வழங்கியுள்ளார்.

 'போடியார்' திரைப்படத்தின் வெள்ளோட்டம் எதிர்வரும் 23, 25, 26 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு விஜயா திரையரங்கில் திரையிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த படக்குழுவினர் மட்டக்களப்பு தழிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல மட்டக்களப்பு வாழ் மக்களை இத்திரப்படத்தை காண அன்புடன் அழைப்பதாக தெரிவித்தனர்.





 



Comments