மட்டு சிவானந்தா, திருமலை இந்துக்கல்லூரி மோதும் 29வது கிரிக்கெட் சமர் ........

 மட்டு சிவானந்தா, திருமலை இந்துக்கல்லூரி மோதும் 29வது கிரிக்கெட் சமர் ........

மட்டக்களப்பு, சிவானந்தா பாடசாலையும், திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியும் 29வது தடவையான மோதும் Battil of the Golds வரலாற்று மிக்க பெரும் கிரிக்கெட் சமர் எதிர்வரும் 31.08.2024 அன்று திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இவ்விரு பாடசாலைகளுக்கும் இடையிலான இக்கிரிக்கெட் சமர் 29வது தடவையாக நடைபெறவுள்ளது. ஆரம்ப காலங்களில் முதல் போட்டியானது  மென் பந்து கிரிக்கெட் சமராகவும்,  அதனைத் தொடர்ந்து கடின பந்து கிரிக்கெட் சமராகவும் நடைபெற்று வருகின்றது. கடந்த வருடம் மட்டக்களப்பு சிவானந்தா பாடசாலை வெற்றி வாகை சூடி இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இப்போட்டிகளில் பங்குபற்றவுள்ள சிவானந்தா பாடசாலையின் வீரர்கள் தற்போது மட்டக்களப்பில் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதுடன், இவர்கள் அன்மையில் இராமகிருஸ்ண மிசன்  முகாமையாளர் சுவாமி நீளமாதவானந்த மஹராஜ் அவர்களிடம் ஆசீரைப்பெற்றதுடன், இவர்களுக்கான பாதணிகள் மற்றும் இப்போட்டிக்கான பிரத்தியே சீருடையும் வழங்கி வைக்கப்பட்டது.

 சிவானந்தா பாடசாலையின் கிரிக்கெட் அணிக்கு பயிற்றுவிப்பாளராக செயற்படும் டிசாந் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் சிறந்த ஒரு அணி இவ்வருடமும் களம் காண்பதாகவும், நிச்சயமாக இவ்வருடமும் சிவானந்தா பாடசாலை வெற்றி பெற்று சாதனை படைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் சிவானந்தா பாடசாலைக்கு அணித்தலைவராக J.நிரூபன் அவர்களும், திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் அணித்தலைவராக N.ஆதீஸ் அவர்களும் வழிநடத்தவுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.




Comments