நாவலடி 233வது இராணுவ படைப்பிரிவின், 7வது கெமுனு பட்டாலியன் இராணுவ பிரிவின் உதைபந்தாட்டப் போட்டி.................

நாவலடி 233வது இராணுவ படைப்பிரிவின், 7வது கெமுனு பட்டாலியன் இராணுவ பிரிவின் உதைபந்தாட்டப் போட்டி.................

மட்டக்களப்பு நாவலடி 233வது இராணுவ படைப்பிரிவின், 7வது கெமுனு பட்டாலியன் இராணுவ பிரிவு, ஐக்கிய இராச்சிய நண்பர்களின் நிதியுதவியுடன் சிநேகபூர்வ உதைபந்தாட்டப் போட்டியொன்றை (27) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடாத்தியது.

வாகரை நாகாபுரம் விடியல் விளையாட்டுக் கழகம் மற்றும் வாகரை யங் லயன்ஸ் விளையாட்டுக் கழகம் என இப் போட்டியில் மோதின கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.குலதுங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்

முன்னதாக கலாசார பாரம்பரியங்களுடன் அதிதிகள் மற்றும் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு, போட்டி ஆரம்பிக்கப்பட்டது. போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வாகரை யங் லயன்ஸ் விளையாட்டு கழக உதைபந்தாட்ட அணியினர் வெற்றி பெற்றது.

வெற்றியீட்டிய கழகத்திற்கு வெற்றிக்கிண்ணமும், போட்டியில் பங்கெடுத்த வீரர்களுக்கு பரிசில்கள் மற்றும் அணிகளுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன. கௌரவ அதிதிகளாக ஐக்கிய இராஜ்ஜிய நண்பர்கள் மற்றும் இராணுவத்தின் 23,24,243 மற்றும் 233வது இராணுவ கட்டளை பிரிவு உயர் நிலை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Comments