மட்டு. புளியந்தீவு புனித மரியாள் பேராலய விண்ணேற்பு மாதாவின் 216வது திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்.................
மட்டு. புளியந்தீவு புனித மரியாள் பேராலய விண்ணேற்பு மாதாவின் 216வது திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்.................
மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலய விண்ணேற்பு மாதாவின் 216வது திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் சுமார் 216 ஆண்டுகள் பழமைவாய்ந்த பேராலயமான மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் விண்ணேற்பு மாதா பெருவிழா (07) மாலை பங்குத்தந்தை நிக்சன் அடிகளார் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
பெரு திருவிழா கூட்டுத் திருப்பலி எதிர் வரும் 15ஆம் திகதி மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் காலை 7 மணிக்கு ஒப்புக் கொடுக்கப்படவுள்ளது. திருவிழா நவ நாட்காலங்களில் தினமும் மாலை திருச்ஜெபமாலை இடம்பெற்ற திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
எதிர்வரும் 14ஆம் திகதி புதன்கிழமை மாலை நற்கருணை ஆராதனையும். திருப்பலியும் தொடர்ந்து அன்னையின் திருவுருவ பவனியும் இடம்பெறும்.
Comments
Post a Comment