செங்கலடி புனித நீக்கொலாஸ் ஆலய 2024ம் ஆண்டுக்கான திருவிழா நிறைவு.........
மட்டக்களப்பு செங்கலடி புனித நீக்கொலாஸ் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது.
மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் பழமை வாய்ந்த ஆலயமான செங்கலடி புனித நீக்கொலாஸ் ஆலயத்தின் வருடாந்த திருவிழா பங்குதந்தை நிகஸ்டன் அடிகளார் தலைமையில் கடந்த 16 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது.
நவ நாட்களும் விசேட ஆராதனைகள் இடம்பெற்ற நிலையில், (24) மாலை திருச்சொரூப பவனியும் விசேட நற்கருணை வழிபாடும் நடைபெற்றது.
திருவிழாவின் இறுதி நாளாக (25) சொமஸ்கன் சபை அருட்தந்தை மகிமைதாஸ் அடிகளார் தலைமையில், பங்கு தந்தை நிக்ஸன் அடிகளாருடன் அருட் தந்தையர்கள் இணைந்து கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர். ஆலய முன்றலில் இடம்பெற்ற புனிதரின் திருச்சொரூப ஆசீருடன் கொடியிறக்கப்பட்டு திருவிழா நிறைவுபெற்றது.
Comments
Post a Comment