வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையில் 2021ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா...............
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையில் 2021ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா கல்லூரி அதிபர் தவதிருமகள் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
பரிசளிப்பு விழா நிகழ்வில் மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட பாடவிதான செயற்பாடுகள், பரீட்சைகள், கல்விப் பொதுத்தர சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக அனுமதியினை பெற்றுள்ள மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு சவால் கிண்ணமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கல்லூரியின் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி அமைச்சின் தமிழ் பாடசாலைகள் மற்றும் தோட்ட அபிவிருத்தி பிரிவு கல்வி பணிப்பாளர் எஸ். பிரணவதாசன் கலந்து கொண்டார்.
கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர் உமாகாந்த், மட்டக்களப்பு கல்வி வலய உதவி கல்விப்பணிப்பாளர் சாமினி ரவிராஜ், மட்டக்களப்பு கல்வி வலய அலுவலக திட்டமிடல் உதவி பணிப்பாளர் சி.சுபாகரன் ஆகியோரும் அதிதிகளாக கலந்து கொண்டதோடு ஓய்வு நிலை பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விப்பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் என பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment