மட்டக்களப்பு பாடுமீன் அரிமா கழகத்தின் 18 வது பதவியேற்பு நிகழ்வு........
மட்டக்களப்பு பாடுமீன் அரிமா கழகத்தின் அங்கத்தவர்களின் 18வது பதவியேற்பு நிகழ்வு (10) மட்டக்களப்பில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு பாடுமீன் அரிமா கழகத்தின் 306 (2) புதிய நிருவாகிகளின் பதவியேற்பு நிகழ்வானது மட்டக்களப்பு கபே சில் விடுதியில் கழகத்தின் நிகழ்ச்சி தலைவர் அரிமா கிறிசாந்த் மற்றும் புதிய தலைவர் லயன் கே.சுவாஸ்கரன் ஆகியோர் தலைமையில் (10) திகதி சனிக்கிழமை மிகச் சிறப்பாக இடம் பெற்றது.
அதிதிகளுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தியதனைத் தொடர்ந்து பதவியேற்பு நிகழ்வுகள் கவின்கலைக்கூட மாணவர்களின் கண்கவர் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமாகியது.
பிரதம அதிதியாக லயன்ஸ் கழகத்தின் முன்னால் மாவட்ட ஆளுனர் அரிமா இஸ்மாத் ஹமீட் அவர்கள் கலந்து கொண்ட நிகழ்விற்கு கௌரவ அதிதியாக முன்னால் மாவட்ட ஆளுனர் அரிமா நிமால் ரணவக்க, அரிமா சந்திரா மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்ததுடன், புதிய தலைவர் உள்ளிட்ட புதிய நிருவாக உறுப்பினர்கள் தமது கடமைப் பொறுப்புக்களை பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் முன்னால் தலைவர் அரிமா பிரியகாந்த், மட்டக்களப்பு பாடுமீன் அரிமா கழகத்தின் அங்கத்தவர்கள் உள்ளிட்ட அங்கத்தவர்களின் உறவினர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்ததுடன், கழகத்தின் முன்னால் தலைவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், பாடுமீன் அரிமா கழகத்தினால் சுய தொழில் முயற்சியாளர்களுக்கான உதவிகள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டதுடன், வீணை கலைஞர் மதுமிதாவின் வீணை இசையானது அனைவரது மனங்களையும் கொள்ளைகொள்ளுமளவிற்கு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment