பெரிய கல்லாறு தூய செபமாலை அன்னை ஆலய 130வது திருவிழா...........
மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் அமையப் பெற்றுள்ள பெரிய கல்லாறு தூய செபமாலை அன்னை ஆலய 130வது திருவிழா திருப்பலியானது (25) ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணிக்கு பங்குத்தந்தை அருட்பணி அன்ரன் டெறன்ஸ் றாகல் அடிகளாரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.
கடந்த 9 நாட்கள் மாலை வழிபாடுகள் இறைமக்களை தயார்படுத்தும் வண்ணம் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கருப்பொருளை மையப்படுத்தியதாக இறைமக்களுக்கு சிந்தனைகள் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சனிக்கிழமை மாலை வேஸ்பர் நற்கருணை ஆராதனை வழிபாடு அருட்தந்தை VC.அன்னதாஸ் அடிகளாரின் தலைமையில் இடம் பெற்றது.
திருவிழா திருப்பலியினை அருட்தந்தை VC.அன்னதாஸ் அடிகளார் தலைமைதாங்க பங்குத்தந்தை அன்ரன் டெறன்ஸ் றாகல் அடிகளாரும், உதவி பங்கு தந்தை கர்ஷதன் றிச்சட்சன் அடிகளாரும், இணைந்து கூட்டு திருப்பலியினை ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலி நிறைவில் அன்னை திருச்சுருபம் ஆலயம் சுற்றி பவனியாக எடுத்துவரப்பட்டதுடன், அன்னை திருச்சுருப புகழ்பாக்கள் இசைக்கப்பட்டு கவிகள் இசைக்கப்பட்டு இறுதி செபத்துடன் அன்னை திருச்சுருப ஆசீரை அருட்தந்தை VC.அன்னதாஸ் அடிகளார் இறைமக்களுக்கு வழங்கி வைத்து கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.
Comments
Post a Comment