மட்டக்களப்பில் 13 வயதிற்குட்பட்டோருக்கான கடின பந்து தொடர்.........

 மட்டக்களப்பில் 13 வயதிற்குட்பட்டோருக்கான கடின பந்து தொடர்.........

மட்டக்களப்பு  2024ம்  ஆண்டுக்கான பெனடிக் கிரிக்கெட் தொடர்  குணசேகரம் ஞாபகார்த்தமாக கின்னமாக  மூன்றாவது தடைவையாக  நடாத்த திட்டமிட்டுள்ளது.

 இத்தொடர் மட்டக்களப்பில் சிறுவர் கடினபந்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் வருடாந்தம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்,  இத்தொடரில் 13 வயதிற்குபட்ட  பாடசாலை மற்றும் அக்கடமிகள் கலந்து கொள்ளவுள்ளன,  இதன் அடிப்படையில் ஏறாவூர் அறபா கல்லூரி, கோல்டன்  ஈகிள் ஜூனியர், டிஸ்கோ ஜூனியர், சிவானந்தா ஜூனியர், நியூ ஈஸ்டன் ஸ்டார் அக்கடமி, EPP அக்கடமி, யங் ஸ்டார் அக்கடமி,  மற்றும் கிரான யுனைட்டட் ஜூனியர் ஆகிய அணிகள் மோதவுள்ளன் 

இப்போட்டிகள் அனைத்தும் ஈஸ்டன் ஸ்டார் மைதானம் மற்றும் எவகிறீன் மைதானங்கில் நடைபெறவுள்ளது. இப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 22.08.2024 (வியாழக்கிழமை) ஆரம்பமாவுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Comments