கல்லடி-டச்பார் இஞ்ஞாசியார் ஆலயம் ஓர் வரலாற்று பார்வை: பகுதி-07

கல்லடி-டச்பார் இஞ்ஞாசியார் ஆலயம் ஓர் வரலாற்று பார்வை: பகுதி-07

16.08.2024 தனது குருத்துவத்தின் 10 வருடங்களை நினைவுகூறும் ரொசான் சுவக்கீன் அடிகளாருக்கு இத்தொடர் சமர்ப்பனம்:

புதிய பங்குத்தந்தை  ரொசான் சுவக்கீன் அடிகளார்:

 2015ல் லோரன்ஸ் லோகநாதன் மாற்றலாகி செல்ல புதிய பங்குத்தந்தையாக 2016ம் ஆண்டில் இயேசுசபை துறவியான ரொசான் சுவக்கீன் அடிகளார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தை பொறுப்பேற்றுக் கொள்கின்றார். இவர் தொடர்சியாக 2020ம் ஆண்டு வரை புனித இஞ்ஞாசியார் பங்கில் கடமையாற்கின்றார். 

2016ல் நூற்றாண்டு விழா சிறப்பு:

இவர் ஆலயத்தை பொறுப்பேற்றவுடன் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் முகமாக பல விடயங்களை முன்னிற்று செய்கின்றார். இதன் பயனாக நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பாக 2016ம் ஆண்டு நடாத்தி இருந்தார், இதன் போது ஆலயத்தின் முகப்பில் நாம் நுழைந்தவுடன் முன் பகுதியில் நூற்றாண்டை நினைவு கூறும் முகமாக புனித இஞ்ஞாசியார் அமர்ந்திது எழுதுவது போன்ற திருஉருவத்தை ஸ்தாபித்து அவ்விடத்தில் 1916-2016 எனும் நினைவு சின்னத்தை  அமைத்துக் கொடுத்தார்.

லூர்து அன்னைக்கு புதிய கெவி:

அத்துடன் லூர்து அன்னை காட்சி கொடுத்த கெவியை அமைத்து அவ்விடத்தை மேலும் மேருகூட்டச் செய்தார். இதன் பின் புதிதாக சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் சுருவத்தை ஆலய முன்பகுதியில் அமைத்து அதற்கு ஒரு பலி பீடத்தையும் அமைத்து ஆலயத்தின் வளாகத்தில் திருப்பலியை ஒப்புக் கொடுப்பதற்கான வழி வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தார். மேலும் கல்லறை ஆண்டவரை புதுப்பொழிவு பெறச் செய்ததுடன், நற்கருணை ஆண்டவரையும் ஸ்தாபித்துக் கொடுத்தார். பக்திச்சபைகளை  ஒழுங்கமைத்து ஒழுங்காக செயற்படும் வண்ணம் அவர்களை முன்னிலைப்படுத்தினார்.

கடற்கரை அன்னை வேளாங்கன்னிக்கு சுற்று மதில்:

இதன் பின் கல்லடி கடற்கரையில் அமைந்திருக்கும் அன்னை வேளாங்கன்னி ஆலயத்தின் வளாகத்தில் விசேட நாட்களில் திருப்பலி ஒப்புக் கொடுப்பதற்கு புதிதாக விசேட நிகழ்வுகள் நடாத்துவதற்கும் என ஒரு பார்வை அரங்கையும் நிர்மானித்து கொடுத்துள்ளர். அத்தோடு அன்னை வேளாங்கன்னி ஆலய சுற்று மதில்களில் ஒரு பகுதியை தனது பணிக்காலத்தில் நிறைவுறுத்தி இருந்தார். 

மீண்டும் பங்குத்தந்தையானார் லோரன்ஸ் அடிகளார்:

தனது குருத்திவத்தின் முதல் பங்கான புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில் அயாது உழைத்த அருட்தந்தை ரொசான் ரொசான் சுவக்கீன் அடிகளாருக்கு, 2020ம் ஆண்டு மாற்றம் கிடைத்தது. இதன் போது ஏற்கவே புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில் பங்குத்தந்தையாக கடமையாற்றிய அருட்தந்தை லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் மீண்டும் பங்குத்தந்தையாக 2020ம் ஆண்டு வருகின்றார்.

8ம் தொடர் தொடரும்..............

ரொசான் சுவக்கீன் அடிகளாரின் சில நினைவுகள்:




















Comments