கல்லடி-டச்பார் இஞ்ஞாசியார் ஆலயம் ஓர் வரலாற்று பார்வை: பகுதி-06

 கல்லடி-டச்பார் இஞ்ஞாசியார் ஆலயம் ஓர் வரலாற்று பார்வை: பகுதி-06

விடைபெற்றார் ஜோசப்மேரி:

அனைவரையும் ஆட்கொண்ட அந்த சோக செய்தி இது தான் ஆலயத்தை கட்டி, முதல் பங்கு குருவாக செயற்பட்ட வந்த பாதர் ஜோசப்மேரி அடிகளார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தை விட்டு வெளியேறியது அந்த செய்தி அவர் விடைபெற்றுச் செல்ல உதவி பங்குத்தந்தையாக இருந்த இயேசுசபை துறவியான ஜீவராஜ் அடிகளார் 2012ம் ஆண்டு புதிய பங்குத்தந்தையாக  வருகின்றார். இது ஒரு இயேசுசபைக்குரிய ஆலயம் என்பதால் இயேசு சபை குருக்களே நியமிக்கப்பட்டு வந்தனர்.

புதிய குருவாக ஜீவன் அடிகளார்:

ஜீவராஜ் அடிகளாரின் புதிய சிந்தனை, புதிய உத்வேகம், இவ்வாலயத்தை ஒரு புதிய பாதையில் கொண்டு செல்ல முனைந்தார். இதன் முதல் கட்டமாக ஆலயத்தில் ஒரு நிதிக்குழுவை ஸ்தாபிக்கின்றார், இதன் மூலம் ஆலயத்தின் முன் முகப்பு வாயில், திருப்பண்ட அறை, ஆலயத்தில் புதிய டோம் வசதி, சுற்றுமதில், நற்கருணை ஆண்டவர், லூர்து அன்னையின் கெவி, ஆலய முகப்பில் இருந்து ஆலயம் வரையான வீதி, விளையாட்டு அரங்கு போன்றவற்றை செய்ய முற்படுகின்றார். இதற்காக நிதி சேர்க்க அதிஸ்டலாப சீட்டுக்களை அடித்து விற்பனை செய்கின்றார்.

ஆலய முகப்பு வாயில்

ஆனால் இவரால் ஒரு பகுதிக்கான மதில், ஆலய முகப்பு வாயில், ஆலய வாயிலில் இருந்து ஆலயம் வரையான வீதி போன்றவை மட்டுமே அவரது காலத்தில் செய்து கொடுக்கப்பட்டது. இதன் போது இவரால் கட்டப்பட்ட ஆலய முகப்பு வாயில் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை அவர்களால் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஜீவன் அடிகளார் பங்குதந்தையாக இருந்த போது  2014.06.22 அன்று நடைபெற்ற கல்லடி அந்தோணியார் ஆலய திருவிழா  புகைப்படம்

 இவர் மற்றும் இரண்டு பணிகளை செய்து மக்களின் மனங்களில் இன்றும் இடம் பிடித்துள்ளார் ஒன்று கல்லடி பிரதான வீதியில் உள்ள அந்தோணியார் ஆலயம், புதிய கல்லடி பாலம் கட்டும் போது அது உடைக்கப்படவேண்டிய ஒரு கட்டம் ஏற்படுகின்றது. அவ்விடத்தில் ஒரு சிறிய அந்தோணியார் சுருவத்தை ஒரு தூண்தாங்கியவாறு இருந்துள்ளது அதை வீதியில் இருந்து இறங்கி தான் சென்று வணங்க வேண்டும் ஒர் பள்ளமான இடத்தில் அந்த அந்தோணியார் சுருவம் இருந்தது. எனவே அதை சற்று பின் தள்ளி வைத்து தருவதாக புதிய கல்லடி பாலம் அமைப்போர் கூறிய போது அதை ஒரு நிரந்தர கட்டிடத்தில் அமைத்து தருமாறு கோரி அதை இன்று ஒரு நிரந்தர கட்டிடமாக அமைய வழிசமைத்துக் கொடுத்துள்ளார்.

ஜீவன் அடிகளார் பங்குதந்தையாக இருந்த போது  2014ஆண்டு நடைபெற்ற கல்லடி அன்னை வேளாங்கன்னி ஆலய திருவிழா  புகைப்படம்

அது மாத்திரமன்றி கடற்கரை அன்னை வேளாங்கன்னி ஆலயத்திற்கு ஒர் எல்லையை நிர்னயித்து, அதை அனுமதி பெற்று அமைத்துக் கொடுத்துள்ளார் இன்றும், அன்னையின் ஆலயம் ஒரு தனி இருப்பிடத்தில் கதவுகள் பூட்டப்பட்டு, சுற்றி மதில் அமைக்கப்பட்டு இருப்பதற்கு முதல் உந்து சக்தியின் காரணியாக இவர் திகழ்ந்துள்ளார்.

புதிய குருவாக லோரன்ஸ் அடிகளார்:

2012ம் ஆண்டு முதல் கடமையாற்றி ஜீவன் அடிகளார் 2014ம் ஆண்டு இறுதி காலம் வரை தன் பணியை இவ்வாலயத்தில் வழங்கி விடைபெற்று செல்கின்றார். அப்போது 2014 கடைசி காலத்தில் புதிய பங்குத்தந்தையாக லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் வதிவிடக்குருவாக வருகின்றார். இவர் ஆலயத்தின் நூற்றான்டுக்கான பணிகளை பற்றி சிந்திக்கத் தொடங்கினார்,  பணிகளை முன்னெடுக்கும் போது துரதிஸ்டவசமாக குறுகிய காலத்துடன் 2015ல் இப்பங்கை விட்டு செல்கின்றார்  இதன் பின் தான் ஒரு குருவானவர் வருகின்றார் அவரைப்பற்றி அடுத்த தொடரில் பார்ப்போம்.

7ம் தொடர் தொடரும்.......

ஜீவன் அடிகளார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில் பணிபுரிந்த போது சில புகைப்படங்கள்....

2014ஆண்டு நடைபெற்ற கல்லடி அன்னை வேளாங்கன்னி ஆலய திருவிழா  புகைப்படம்





2014.06.22 அன்று நடைபெற்ற கல்லடி அந்தோணியார் ஆலய திருவிழா  புகைப்படம்






 


Comments