கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் 04 வீடுகளுக்கு அடிக்கல் நடப்பட்டது.....

 கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் 04 வீடுகளுக்கு அடிக்கல் நடப்பட்டது.....

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் 2024ம் ஆண்டுக்கான  சமுர்த்தி அபிவிருத்தி தினணக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ரன்விமன வீடுகள் இரண்டிற்கும்  ஜெயவிமன  வீடுகள் இரண்டிற்கும் இன்று (09)  பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் அவர்களினால் அடிக்கல் நாடப்பட்டது.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ரமீசா, சமுர்த்தி  தலைமை முகாமையாளர் எஸ்.ஏ.எம்.பசீர், சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.ரவிச்சந்திரன், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் ஏ.எல்.சரீப், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான், பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர் என்.எம்.எச்.முகம்மட், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.எம்.சியான் ஆகியோருடன் பயனாளிகளும் கலந்து கொண்டுள்ளார்.










Comments