பிரித்தானிய வரலாற்றில் முதல் தமிழ் MP ஈழத் தமிழ் பெண் உமா குமரன்.............
பிரித்தானியா தேர்தலில் லேபர் கட்சி சார்பாக போட்டியிட்ட உமா குமாரன் அவர்கள், 19,145 வாக்குகளை பெற்று பெரும் வெற்றியடைந்துள்ளார். இவர் ஈழத் தமிழ் பெண் என்பது உலகத் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விடயம். பிரித்தானிய வரலாற்றில் முதல் தமிழ் MP உமா குமரன் ஆவார். அதுவும் ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்க விடயம். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எல்லாக் கட்சி உறுப்பினர்களையும் விட பல மடங்கு அதிக வாக்குகளைப் பெற்று உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார்.
பிரிட்டன் பொது தேர்தலையொட்டி, மொத்தமுள்ள 650 தொகுதிகளில் வியாழக்கிழமை (04) வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்த தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் தியெர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர்கட்சி, பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியை தோற்கடித்து மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த தேர்தலில் அதிகளிவில் இந்தியர்க்கள் போட்டியிட்டனர். இந்த நிலையில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழ்ப் பெண் உமா குமரன், லண்டன் ஸ்டராட்ஃபோர்டு தொகுதியில் 19,145 வாக்குகளை பெற்று மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான கேன் பிளாக்வெல் 3,144 வாக்குகளை மட்டுமே பெற்று 4வது இடத்தை பெற்றார்.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஈழத் தமிழ்ப் பெண்ணான உமா குமரன் பிரித்தானிய வரலாற்றில் முதல் தமிழ் MP ஆவார். இவரது குடும்பம் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போருக்கு பின்னர் இல்கிலாந்துக்கு குடிபெயர்த்துள்ளனர். லண்டனில் பிறந்து வளர்ந்த அவர், அங்கேயே படித்து அரசியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.
2007 -2009 வரையில் சுகாதார மற்றும் பராமரிப்பு நிறுவனங்களுக்கான பணியாளர் வல்லுநர்களுக்காக பணியாற்றினார். 2009ம் ஆண்டு முதல் 2010 வரை தொழிலாளர் கட்சி MP டான் பட்லரின் நாடாளுமன்ற ஆராய்ச்சியாளராகவும், வழக்கறிஞராகவும் இருந்தார்.
Comments
Post a Comment