திக்கோடை கணேச மகா வித்தியாலயத்தில் கணித பூங்கா திறந்துவைப்பு....
(கடோ கபு) பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட திக்கோடை கணேச மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட கணித பூங்கா திறந்து வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் (17) வித்தியால அதிபர் ஆ.நித்தியானந்தம் தலைமையில் இடம்பெற்றது.
இக் கணித பூங்காவினை பட்டிருப்பு கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் பு.திவிதரன் அவர்கள் திறந்து வைத்து மாணவர்களின் பயன்பாட்டுக்காக கையளித்திருந்தார்.
இக் கணித பூங்காவானது பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகம் மற்றும் வித்தியாலய மாணவர்களின் பெற்றோரின் நிதிப்பங்களிப்புடன் வித்தியாலய அதிபர், ஆசிரியர் மாணவர்களினால் சிறந்த முறையில் அமைக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
Comments
Post a Comment