வவுணதீவு நாவற்காடு பகுதியில் சோலர் பவர் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கு எதிராகபோராட்டம் முன்னெடுப்பு........
வவுணதீவு நாவற்காடு பகுதியில் சோலர் பவர் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கு எதிராகபோராட்டம் முன்னெடுப்பு........
மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவற்காடு பகுதியில் சோலர் பவர் உற்பத்தியை விரிவுபடுத்தும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துமாறு கோரி போராட்டமொன்று (29) முன்னெடுக்கப்பட்டது.
வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடிய நாவற்காடு பகுதி பொதுமக்கள் அமைதியான முறையில் தமது எதிர்ப்பிணை வெளியிட்டனர்.
ஏற்கனவே வயல் நிலங்களில் அமைக்கப்பட்ட சோலர் பவர் உற்பத்தி திட்டத்தினால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுவரும் நிலையில், அதனை விரிவுபடுத்த முன்னெடுக்கும் செயற்பாடுகளால் மேலும் அசௌகரியங்கள் ஏற்படும் என போராட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.
எமது சூழல் எமக்கே வேண்டும், குடியிருப்பு காணிகளை கொள்ளையடிக்காதே, கால்நடை வளர்ப்பினை முடக்காதேஇபோன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
Comments
Post a Comment