அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒன்றாக இணைந்து கூட்டமைப்பாக போட்டியிடவேண்டும்:கோவிந்தன் கருணாகரம்.

 அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒன்றாக இணைந்து கூட்டமைப்பாக போட்டியிடவேண்டும்:கோவிந்தன் கருணாகரம்.

(வரதன்) அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒன்றாக இணைந்து கூட்டமைப்பாக போட்டியிடவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு ஆனால் கட்சி செயற்பாடுகளுக்கும் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் பதவிக்கும் தொடர்பு இல்லை என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்ட நிகழ்ச்சிகளில், அத்திட்டங்களை முன்மொழிந்த மாவட்டத்தின் மக்கள் பிரதி நிதிகளை, மக்கள் பாவனைக்காக கையளிக்கப் படுகின்ற போது அப்பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமல் குறித்து துறைக்கு பொறுப்பான அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து அமைச்சர் இந்த விடயத்தை ஊடகங்கள் ஊடாக மக்களுக்கு தெரியப் படுத்துமாறு தெரிவித்துள்ளார். 
அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒன்றாக இணைந்து, கூட்டமைப்பாக போட்டியிடவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு ஆனால், வீட்டுச்சின்னம் நீதிமன்றில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த தேர்தலில் அது வெளியில் வருவதே சந்தேகம், தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிந்துள்ளதன் காரணமாக பாராளுமன்ற குழுக்களின் தலைவர் பதவியை செல்வம் அடைக்கலநாதனுக்கு வழங்க முடியாது என்ற வகையில் சிலர் பேசி வருவதாகவும், 

ஆனால் கட்சி செயற்பாடுகளுக்கும் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் பதவிக்கும் தொடர்பு இல்லையென்ற காரணத்தினால் சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினராகவுள்ள செல்வம் அடைக்கலநாதனை பாராளுமன்ற குழுக்களின் தலைவராக நியமிக்குமாறு கோரியுள்ளதாகவும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்

Comments