இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் சிபாரிசில் பயனாளிகளுக்கு வீடு........
வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் தேசிய வீடமைப்பு அவிருத்தி அதிகார சபையின் ஊடாக 'சேவா அபிமானி' மற்றும் 'செமட நிவாச' தேசிய வேலை திட்டங்களின் கீழ், வீட்டுக்கடன் நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றன.
வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பிரசன்ன ரணதுங்க அமைச்சரின் சிபாரிசின் கீழ் அமைச்சர்களின் முன்மொழிவுககு அமைய, பயனாளிகள் தெரிவு செய்யப்படுகின்றனர்.
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் சிபாரிசுக்கு அமைய தெரிவு செய்யப்பட்ட 10 பயனாளிகளுக்கு 4.475 மில்லியன் ரூபா காசோலைகள் வழங்கும் நிகழ்வு இராஜாங்க அமைச்சரின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் தங்கத்துரை சுபாஷ்கரன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலக உத்தியோகத்தர்கள், முற்போக்கு தமிழர் கழக உறுப்பினர்கள் பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment