மட்டக்களப்பு றோட்டரிக் கழகத்தின் புதிய தலைவரின் பதவிப் பிரமாண நிகழ்வு............
மட்டக்களப்பு றோட்டரிக் கழகத்தின் 2024 மற்றும் 2025ம் ஆண்டுக்கான புதிய தலைவராக வைத்தியர் கே.முரளிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புதிய தலைவரின் பதவியேற்பு நிகழ்வு நேற்று (21) கழகத்தின் முன்னாள் தலைவர் வைத்தியர் வித்தியா சங்கர் தலைமையில் நடைபெற்றது.
றோட்டரி கழக உறுப்பினர்களின் சேவை நலனை பாராட்டி சான்றிதழ்களும் நினைவு சின்னங்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்டம் ஆளுநர் பி.எச்.எவ்.குமார் சுந்தரராஜ் பங்கேற்றார்.
கௌரவ அதிதியாக உதவி ஆளுநர் சிவபாத சுந்தரமும், விசேட அதிதியாக வைத்தியர் நிபுணர் வைத்தியர் இக்பாலும் கலந்து கொண்டார். கழகத்தின் கடந்த கால செயல்பாடுகள் தொடர்பான ஆவண தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டது.
Comments
Post a Comment