மேக்கஸ் ஸ்பேஸ் நிறுவனம் திறந்து வைப்பு.............

 மேக்கஸ் ஸ்பேஸ் நிறுவனம் திறந்து வைப்பு.............

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் மேக்கஸ் ஸ்பேஸ் நிறுவனத்தினை (09) திகதி திறந்து வைத்தார்.
மேக்கஸ் ஸ்பேஸ் நிறுவ பணிப்பாளர் என்.கிசோர் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் ஓய்வு பெற்ற கிழக்குமாகாண கல்வி பணிப்பாளர் அகிலா கணகசூரியம் மற்றும் 243 வது இராணுவ முகாமின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சந்திம குமாரசிங்க கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிறார்கள் மற்றும் இளைஞர்களுக்கு தொழில் நுட்ப அறிவை மேம்படுத்தும் முகமாக புதிய விஞ்ஞான தொழில் நுட்ப அறிவை வழங்குவதற்காக இவ் நிறுவனம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
உயர் தொழில்நுட்பத்தினாளான கருவிகள் மற்றும் இயந்திரங்கள் மூலம் இளைஞர் யுவதிகளுக்கு கற்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
மேலும் நவீன உலகில் புதிய தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கும் புதிய தொழில் முயற்சியாளராக உருவாக்குவதற்கும் மேக்கஸ் ஸ்பேஸ் நிறுவனம் தனது சேவையை வழங்கவுள்ளது.
மேலும் இந் நிறுவனத்தினால் நடமாடும் பேருந்தின் மூலம் தூர பிரதேசங்களுக்கும் சென்று தொழில் நுட்ப அறிவை பரவலாக்குவதற்கு முனைப்புடன் செயற்படவுள்ளது. மேலும் இவ் நிகழ்வில் கலந்து கொண்ட உயர் அதிகாரிகளுக்கு கெளரவம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ் நிகழ்வில் பிரதி கல்வி பணிப்பாளர் ஹரிகரன், ஐகப் நிறுவன இணைப்பாளர் சுகிர்தராஜ் மாணவர்கள் பெற்றேர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



Comments