மட்டு மாவட்டத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் அஸ்வெசும பயனாளிகளை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்ட ம்......
மட்டு மாவட்டத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் அஸ்வெசும பயனாளிகளை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்ட ம்......
மட்டக்களப்பு மாவட்டத்தில் அஸ்வெசும பயனாளிகளை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கி, சமுர்த்தி திணைக்களத்துடன் இணைந்து, தெரிவு செய்யப்பட்ட ஐந்து பிரதேச செயலகங்களில் இருந்து பயனாளிகளை தெரிவு செய்யும் கூட்டம் (25) அன்று புதிய மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் ஜே.ஜே.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
மேற்படி கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.ராஜ்பாபு அவர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட ஆசிய அபிவிருத்தி வங்கியின் இத்திட்டத்திற்கான ஆலோசகர் பிரான்சிஸ் ஜெஸ்மின் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது.
இவ்வேலைத்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து மண்முனை வடக்கு பிரதேச செயலகம், ஏறாவூர் பற்று பிரதேச செயலகம், மண்முனை மேற்கு பிரதேச செயலகம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம், கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு பிரதேச செயலகங்களில் இருந்தும் ஐந்து கிராமசேவர் பிரிகள் தெரிவு செய்யப்பட்டு, முதல் கட்டமாக ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் 32 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு மேம்படுத்தப்படவுள்ளனர். இதன் போது ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் 32 அஸ்வெசும பயனாளிகள் தெரிவு செய்யும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், மாவட்ட சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர்கள். சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment