கிரான் மத்திய கல்லூரியில் சித்திரக் கண்காட்சி.....

 கிரான் மத்திய கல்லூரியில் சித்திரக் கண்காட்சி.....

'கலையால் உயர்வோம்' என்ற தொனிப் பொருளில் பட்டாம் பூச்சி சித்திரக் கண்காட்சி மட்டக்களப்பு கிரான் மத்திய கல்லூரியில்  (17) ஆரம்பமானது.

கண்காட்சியினை கல்குடா கல்வி வலய சித்திர பாட மணவர்கள் மற்றும் சித்திர பாட ஆசிரியர்கள் இணைந்து கல்குடா கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் த.அனந்தரூபனின் வழிகாட்டலில் ஏற்பாடு செய்திருந்தனர்.

21 ஆம் நூற்றாண்டில், மாணவர்களிடம் காணப்பட வேண்டிய கற்றல் திறன்கள், கற்பனை திறன்கள் மற்றும் கருத்து வெளிப்பாடுகளை சித்திரம் மூலம் வெளிப்படுத்துவதை ஊக்குவிக்கும் முகமாகவும் கையடக்க தொலைபேசி, இணையப் பாவனைகளில் அதிக ஆர்வம் காட்டுவோரை, இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் மூலம் வழிப்படுத்தும் நோக்குடனும் காண்காட்சி ஒழுங்குபடுத்தப்பட்டது.

நாளைய தினமும் கண்காட்சியை பார்வையிட முடியும். கல்குடா வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், வெற்றிப் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ந.நேசகஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இன்றைய (17) ஆரம்ப நிகழ்வில், சிறப்பு அதிதிகளாக பிரதி கல்விப்பணிப்பாளர்கள் எம்.ஏ.றிஸ்மியா பாணு, சி.தயாளசீலன், மாகாணக் கல்வித் திணைக்கள அழகியற் துறை உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன, முன்னாள் உதவிக் கல்விப்பணிப்பாளர் க.தவராஜரெட்ணம் மற்றும் வளவாளர் வா.சுஹீவ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.


Comments