ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின்பணிகளை விஸ்தரிக்கும் முயற்சி..........

 ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின்பணிகளை விஸ்தரிக்கும் முயற்சி..........

மட்டக்களப்பு, ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில், சீன அரசாங்கத்தின் நிதியுதவியில், நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடத்தில், முதற்கட்டமாக பூரணப்படுத்தப்பட்டுள்ள ஒரு பகுதி, (20) வைத்தியசாலைப் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கட்டடத்தை திறந்து வைத்தார். நவீன சத்திரசிகிச்சை கூடம், இரத்த வங்கி, அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் மருத்துவ விடுதி போன்ற வசதிகளுடன், இக் கட்டடமானது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் வருணசம்பத் பண்டார தலைமையில் நடைபெற்ற, கட்டடத்தின் ஒரு பகுதிக்கான திறப்பு விழா நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா, மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் என்.சிவலிங்கம், மாகாண பணிப்பாளர் டொக்டர் டி.ஜி.எம்.கொஸ்தா, பிராந்தியப் சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் ஆர். முரலீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவின் வேண்டுகோளுக்கமையஇ நல்லாட்சி அரசாங்க காலத்தில்இ சீன அரசாங்கம்இ மருத்துவ கட்டடத்தொகுதிக்காக 450 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments