மட்டக்களப்பு, ஆரையம்பதியில்போதை வஸ்துக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி......

 மட்டக்களப்பு, ஆரையம்பதியில்போதை வஸ்துக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி......

மட்டக்களப்பு, ஆரையம்பதியில் அகில இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் 210வது ஆண்டு நிறைவையொட்டி ஆரையம்பதி மெதடிஸ்த திருச்சபையினால் விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றது.

பேரணியானது ஆரையம்பதி மெதடிஸ்த திருச்சபை முன்றலில் ஆரம்பமாகி பிரதான வீதி வழியாக மீண்டும் ஆரையம்பதி மெதடிஸ்த திருச்சபையை சென்றடைந்தது.

பேரணியில் சென்றோர் போதை வஸ்தினால் ஏற்படும் பாதிப்புகள் போதை வஸ்து பாவையினால் ஏற்படும் பாதிப்புகள் சமூக சீரழிவுகள் போன்றவைகள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு பேரணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஆரையம்பதி மெதடிஸ்த திருச்சபையின் குருவானவர் அருட்தந்தை வினோத், வடக்கு கிழக்கு மாகாண சமூக நலன் பிரிவுக்கான இணைப்பாளர் எஸ்.சசீகரன், மண்முனைப் பற்று பல்சமய ஒன்றிய தலைவர் ஆதம், காத்தான்குடி பொலீஸ் நிலைய சிவில் சமூக பொறுப்பதிகாரி ஜவாஹிர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

Comments