மட்டக்களப்பு பார் வீதியில் எரிபொருள் நிரப்பக் காத்திருந்தவர் உயிரிழப்பு...........

 மட்டக்களப்பு பார் வீதியில்  எரிபொருள் நிரப்பக் காத்திருந்தவர் உயிரிழப்பு...........

மட்டக்களப்பு நாவற்குடாப் பகுதியைச் சேர்ந்த கந்தப்போடி தங்கவேல் (48) என்னும் குடும்பஸ்தரே எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் உயிரிழந்தள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, இன்று (14) ஞாயிற்றுக்கிழமை காலை தனது மகளை மேலதிக வகுப்பிற்காகக் கொண்டு சென்று விட்டு விட்டு, பார் வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பச் சென்ற வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு உடனடியாக வருகை தந்த மட்டக்களப்புத் தலைமையகப் பொலிசாரும், திடீர் மரண விசாரணை அதிகாரியான அம்ஹர் சின்னலெவ்பை ஆகியோர் உயிரிழந்தவரின் சடலத்தைப் பார்வையிட்டதுடன், மேலதிக விசாரணைக்காகச் சடலத்தை மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.


Comments