வாகரை, கிருமிச்சை குளத்துக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் சடலமாக மீட்பு.........
வாகரை, கிருமிச்சை குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
நீரில் மூழ்கிய நிலையிலேயே இந்த மீனவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் (50) கிருமிச்சை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் 2 பிள்ளைகளின் தந்தை என்றும் கூறப்படுகிறது.
இவர் வழமை போல அதிகாலையில் வீட்டிலிருந்து கிருமிச்சை குளத்தில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். பகல் பொழுதாகியும் அந்த மீனவர் வீடு திரும்பாததையடுத்து அவரை உறவினர்கள் தேடிச் சென்ற போது கரையில் அவருடைய தோணி மிதப்பதை கண்டுள்ளனர்.
இதனையடுத்து கடற்படையினர் இயந்திர படகு மூலம் அந்த இடத்தில் தேடிய போது மீனவர் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளில் வாகரை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments
Post a Comment