மட்டக்களப்பு, அரசடி பிள்ளையார் பாடசாலையில் கற்றல் உபகரணக் கண்காட்சி........
மட்டக்களப்பு, அரசடிப் பிள்ளையார் கனிஷ்ட பாடசாலையில் கற்றல் உபகரணக் கண்காட்சி நிகழ்வு பாடசாலை அதிபர் துளசி ஜெயந்திரன் தலைமையில் பாடசாலை வளாகத்தில் 29 - 30 ஆகிய இரு தினங்கள் இடம் பெற உள்ளது.
இக் கண்காட்சியில் பாடசாலை மாணவர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட கண்கவர் ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டு ஆக்கங்களின் பொருள் விளக்கங்களும் வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும். அத்தோடு விஞ்ஞான விளக்கங்களுடன் கூடிய செயல் முறையூடாக விளக்கங்கள் சிறார்களினால் வழங்கப்பட்டது.
இக் கண்காட்சியை அண்மையில் உள்ள பாடசாலை மாணவ, மாணவிகள் பார்வையிட்டுச் சென்றதுடன், இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 35 வருடங்கள் கடந்த நிலையில் முதன் முறையாக இக்காண்காட்சிக்கூடம் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் ஆரம்ப கல்வி உதவிக் கல்வி பணிப்பாளர் ஏ.பிரகாஷ், முன்னாள் பாடசாலை அதிபர் சந்திரிக்கா செல்வநாயகம், பாடசாலை மேம்பாட்டு நிகழ்சித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ.நடேசானத்தராஜா, ஆசிரியர்கள், பெற்றார்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
பொதுமக்களும், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏனைய பாடசாலைகளும் அரசடிப் பிள்ளையார் கனிஷ்ட பாடசாலையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் கண்காட்சியை ஒழுங்கு படுத்தியதாக ஊடகங்களுக்கு அதிபர் தெரிவித்தார்.
மாவட்டத்திலுள்ள ஏனைய பாடசாலை மாணவர்களும் கண்காட்சியை பார்வையிட்டு பயன் பெறுமாறு பாடசாலை சமூகம் சார்பில் அதிபர் கேட்டுக்கொண்டார்.
Comments
Post a Comment