மட்டக்களப்பில் நிறுவனங்களுக்கிடையேயான தொழுநோய் தொடர்பான விசேட கூட்டம்..........
தொழுநோய் தொடர்பாக நிறுவனங்களுக்கிடையேயான மாவட்ட மட்டத்திலான ஒருங்கிணைப்புக்கூட்டம் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் (30) திகதி இடம் பெற்றது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளிஸ்வரன் தலைமையில் வைத்தியர் சதுர்முகம் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழுநோய் தாக்கத்தின் தற்போதய நிலைமை தொடர்பாகவும் இந்நோயை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பாகவும் இதன் போது தெளிவூட்டப்பட்டது.
மாவட்டத்தில் காவேரி கலாமன்றத்தினரினால் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களூக்கான சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாடளாவிய ரீதியாக ஒப்பிடுகையில் மட்டக்களப்பு மாவட்டம் மூன்றாம் இடத்தில் உள்ளமை இங்கு சுட்டிக்காட்டப்பட்டதுடன், இவ் நோய் தாக்கத்தில் சிறார்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளமை தரவுகளின் அடிப்படையில் சுட்டிக்காட்டப்பட்டது.
தொழுநோயை பூரணமாக குணப்படுத்த்துவதற்கான மருத்துவம் தற்போது காணப்படுகின்ற போதும் மக்கள் மத்தியில் தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வின்மைமே இந்நோய் பரவுவதற்கான பிரதான காரணமாக உள்ளது. இதன் போது தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் அனுபவ பகிர்வுகள் இதன் போது இடம் பெற்றது.
இந் நிகழ்வில் தொழுநோய் வைத்திய நிபுணர் திலினி விஜெயசேகர, பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் சரவணபவன், பிராந்திய தொற்று நோய்வைத்தியர் கார்த்திகா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், கல்வி பணிப்பாளர்கள், உயர் அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனத்தின பிரதி நிதிகள், இளைஞர் கழகத்தினர், என பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Comments
Post a Comment