மட்டக்களப்பில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் நடமாடும் சேவை..........

 மட்டக்களப்பில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் நடமாடும் சேவை..........

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் உறுமய வேலைத்திட்டத்தின் கீழ், காணி உறுதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான நடமாடும் சேவை நடைபெற்று வருகின்றது.  இவ் நடமாடும் சேவை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும்.

காணி ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதற்கு, ஆணைக்குழுவின் தலைமையகத்திற்கு செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்ற நிலையில், மக்களின் காலவிரயத்தை கருத்திற்கொண்டு, மட்டக்களப்பில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் சேவைகள் வழங்கப்படுகின்றன. 

காணி ஆவணங்களைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இந்நடமாடும் சேவையினை பயன்படுத்திக் கொள்ள முடியும் என மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் காணி ஆணையாளர் என்.விமல்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.








Comments