ஏறாவூரில், தண்டவாளத்தில் அமர்ந்திருந்த நபரை மோதித் தள்ளிய ரயில்.......
மட்டக்களப்பு, ஏறாவூரில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்து, அதிகாலை வேளை, மதுபானம் அருந்திக்கொண்டிருந்த நபர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார்.
(23) அதிகாலை 2 மணியளவில் இவ் விபத்து சம்பவித்துள்ளது. கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் ஏற்றி வந்த ரயில் மோதியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த 29 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்தவராவர். இவ் விபத்து சம்பவத்தால், (23) காலை மட்டக்களப்பு-கொழும்பு இடையிலான ரயில் சேவை சில மணி நேரங்கள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment