தொழில் உரிமையினை பாதுகாக்குமாறு வலியுறுத்தி வேலையற்ற பட்டதாரிகள் தொடர் போராட்டத்தில்...................
தொழில் உரிமையினை பாதுகாக்குமாறு வலியுறுத்தி வேலையற்ற பட்டதாரிகள் தொடர் போராட்டத்தில்...................
தமது தொழில் உரிமையினை பாதுகாக்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மூன்றாவது நாளாகவும் இன்றைய தினமும் (04) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. தொழில் உரிமையினை வலியுறுத்தும் வகையிலான கோசங்களும் எழுப்பப்பட்டன.
தமக்கான தொழிலை வழங்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்கும் வரையில் போராட்டம் தொடரும் என பட்டதாரிகள் தெரிவித்தனர். ஏனைய மாவட்டங்களில் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படும் நிலைமை காணப்படுவதாக பட்டதாரிகள் கவலை வெளியிட்டனர்
Comments
Post a Comment