கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட உள்ளக வீதி திறந்து வைப்பு............
கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு பிள்ளையாரடியிலுள்ள மருத்துவபீட மாணவர்கள் போக்குவரத்து வசதிக்கு நீண்ட காலம் எதிர்நோக்கி வந்த பிரச்சனைக்கு தீர்வு காணுமுகமாக பெருந் தெருக்கள் அமைச்சு சுமார் 30 கோடி ரூபா நிதியில் காபட் இடப்பட்ட உள்ளக வீதி ஒன்றை நிர்மாணித்துள்ளது.
குறித்த பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்கள் போக்கு வரத்துக்காக எதிர்நோக்கி வந்த நீண்ட கால பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு கிராமிய வீதிகள் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் புதிய காபட் வீதி தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
குறித்த புதிய காபட் வீதியை போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன வைபவ ரீதியாக திறந்து வைத்தார் .சுமார் 2 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த உள்ளக வீதிக்கு சுமார் 30 கோடி ரூபா செலவிடப்பட்டு இருக்கிறது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வல்லிபுரம் கனகசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட வீதி அபிவிருத்தி அமைச்சின் உயர் அதி காரிகள் பலரும் பிரசன்னமாக இருந்தனர்.
அங்கு நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் பந்துல குணவர்த்தன கருத்து வெளியிடுகையில், பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருந்த நாட்டை மீட்டெடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் உட்பட பல்வேறு நாடுகளின் உதவிகளை பெற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டை மீள வழமை நிலைக்கு கொண்டு வந்துள்ளார். இந்நிலைமையை நாம் தொடர்ந்து செல்வதற்கு நாட்டில் சிறந்த தலைமைத்துவம் வெளிநாட்டு தொடர்புகள் மற்றும் புத்திசாதுர்யாமுள்ள தலைவரை தெரிவு செய்ய வேண்டியது நாட்டு மக்களின் கடமையாகும் .
அந்த அடிப்படையில் சர்வதேச நாடுகளின் மதிப்பை பெற்றுள்ள நெருக்கடிக்குள்ளான நாட்டை இன்று சீராக்கத்துக்கு கொண்டு வந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே இந்த நாட்டுக்கு சிறந்த தலைவராக கருதப்படுகிறார்.
இதனை கருத்தில் கொண்டு எதிர்காலத்திலும் இந்த நாட்டை வழமைமை நிலையில் கொண்டு வைத்திருப்பதற்கு இந் நாட்டு மக்கள் தம்மலான பங்களிப்பினை செய்ய முன் வர வேண்டும் என குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சிகள் என்ன கருத்த வெளியிட்டாலும் இந்த நாட்டை மீள கட்டி எழுப்புவதற்கு வழமை நிலைமைக்கு கொண்டு வருவதற்கு ரணில் விக்கிரம சிங்க அபரீத முயற்சி எடுத்து வந்துள்ளதை நாம் இன்று மறந்துவிட முடியாது எனவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.
இதன் போது பல்கலைக்க உப வேந்தர் வல்லிபுரம் கனகசிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் போக்குவரத்துக்காக மட்டக்களப்பு வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தில் வந்து சேர்வதற்கு புகையிரத போக்குவரத்தில் எதிர்நோக்கி வரும் பிரச்சினை பற்றி எடுத்துக் கூறினார்.
இதன் அடிப்படையில் அப்பிரதேசத்தில் புகையிரதே உப நிலையம் ஒன்றை அமைத்துத் தருமாறு வேண்டுகோள் விடுத்தார், அத்துடன் பல்கலைக்கழகம் முன்பாக வீதிகளை கடக்கும் போது, பல்வேறு அனர்த்தங்களையும், வீதி விபத்துகளையும் சந்திக்கும் பல்கலைக்கழக மாணவர்களின் வசதி கருதி பல்கலைக்கழகத்தின் முன்பாக மேம்பாலம் ஒன்றை அமைத்துத் தருமாறும் இங்கு அமைச்சர் பந்துல குணரத்ன விடம் உபவேந்தர் கோரிக்கை விடுத்தார்.
இக்கோரிக்கையினை கவனத்தில் கொண்ட அமைச்சர் பந்துல குணரத்ன புகையிரத உபநிலையம் ஒரு மாதத்தில் உருவாக்குவதற்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும், மேம் பாலம் அமைக்கும் பிரச்சினையை அடுத்த வருட முற்பகுதியில் ஆரம்பிக்கக் கூடியவாறு தாம் நடவடிக்கைகள் எடுப்பதாகவும் தெரிவித்தார்.
Comments
Post a Comment