மட்டக்களப்பு இக்னேசியஸ் வித்தியாலயத்தில் மாணவர் சுகாதார முகாம்............
மட்டக்களப்பு, புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலய மாணவர்களின் சுகாதாரம் தொடர்பாக பரிசோதிக்கும் வைத்திய முகாமொன்று (16) பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் பி.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற வைத்திய முகாமில், மாணவர்களின் பற்சுகாதாரம், நிறை, உயரம், கை போன்ற உடலுறுப்புக்கள் பரிசோதிக்கப்பட்டன.
இதன் போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சுகாதார வைத்திய அதிகாரி பிரசாந்தி, பற்சிகிச்சையாளர் அகிலா, பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்.அமிர்தாப் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களின் சுகாதார விடயங்களைப் பரிசோதித்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment