காத்தான்குடியில் வடிகான்களுக்குள் கழிவு நீரைப் பாய்ச்ச தடை.......

 காத்தான்குடியில் வடிகான்களுக்குள் கழிவு நீரைப் பாய்ச்ச தடை.......

மட்டக்களப்பு, காத்தான்குடியில் வடிகான்களுக்குள் விடுதிகள், சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் உணவகங்களின் கழிவுநீர் செல்வதற்கு காத்தான்குடி நகர சபை மற்றும் காத்தான்குடி சுகாதார அலுவலகம் என்பன இணைந்து தடை விதித்துள்ளன.

காத்தான்குடி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இது தொடர்பில் விசேட கண்கானிப்பில் ஈடுபட்டனர். காத்தான்குடி பிரதான வீதி உட்பட ஏனைய வீதிகளிலுள்ள விடுதிகள், சிற்றுண்டிச் சாலைகள், உணவகங்களின் கழிவு நீர், வடிகானுடன் செல்லாதவாறு, காத்தான்குடி நகர சபை ஊழியர்கள் (29) சீமெந்து மூலம் தடுப்பணைகளையும் அமைத்துள்ளனர்.

Comments