மட்டக்களப்பின் அடையாளங்களின் ஒன்றான பாலமீன்மடு வெளிச்ச வீட்டு புனரமைக்கப்படுகின்றன.....

 மட்டக்களப்பின் அடையாளங்களின் ஒன்றான பாலமீன்மடு வெளிச்ச வீட்டு புனரமைக்கப்படுகின்றன.....

மட்டக்களப்பின் அடையாளமாக திகழும், பாலமீன்மடு வெளிச்ச வீட்டினை புனரமைக்கும் பணிகளை மட்டக்களப்பு மாநகர சபையானது முன்னெடுத்து வருகின்றது. 

இவ்வெளிச்ச வீடானது 1913ம் ஆண்டு பிரித்தானியர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது, 27 மீற்றர் (89 அடி) உயரத்தினை கொண்டதாக  அமையப் பெற்றுள்ள இவ் வெளிச்ச வீடு பலகாலமாக கவனிப்பாரின்றி காணப்பட்டது. 

இந்நிலையில்,  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரின் பணிப்புரைக்கு அமைய, மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எந்திரி.என்.சிவலிங்கம் அவர்களின் வழிகாட்டலில் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையின் 2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு நிதியில் ஊடாக புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

தொன்மைமிகு வரலாற்று சின்னங்களை பாதுகாக்கும் நோக்கிலும், சுற்றுலா துறையினை மேம்படுத்தும் வகையிலும் குறித்த புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இம்மாத இறுதியில் பொது மக்களின் பார்வைக்காகவும், பாவனைக்ககாகவும் கையளிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




Comments