மகிழவட்டுவான் பாடசாலைக்கு எதிர்க்கட்சித் தலைவரால் ஸ்மார்ட் வகுப்பறை கையளிப்பு.............
மட்டக்களப்பு மண்முனை மேற்கு மகிழவட்டவான் மகா வித்தியாலய மாணவர்களின் பாவனைக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் ஸ்மார்ட் வகுப்பறை (04) கையளிக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் எஸ்.கருணதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஐக்கிய மக்கள் சக்தியின் வடமாகாண அமைப்பாளர் உமாசந்திரா பிரகாஷ், மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சோ. கணேசமூர்த்தி, தொகுதி அமைப்பாளர்கள், கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் முதலாவதாக ஸ்மார்ட் வகுப்பறை திறந்து வைக்கப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், சஜித் பிரேமதாசா மாணவர்களுடன் கற்றல் செயல்பாடுகள் தொடர்பாகக் கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து பாடசாலையின் நன்மை கருதி பரதநாட்டிய மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கான ஆடைகள் மற்றும் அணிகள் வாங்குவதற்காக ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியதுடன்இ உயர்தர மாணவர்களுக்கு ஆங்கில அகராதி புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
Comments
Post a Comment