இம் மாவட்டத்தின் பிரதி பொலிஸ் மாஅதிபராக கடந்த 6ம் திகதி கடமையினைப் பொறுப்பேற்றுள்ள ஜெகத் நிசாந்த அரசாங்க அதிபர் ஜெஸ்டினா முரளிதரணை திராய்மடு புதிய மாவட்ட செயலகத்தில் உத்தியோக பூர்வமாக சந்தித்தார்.
இதன் போது மாவட்டத்தின் பாதுகாப்பு மற்றும் சிவில் நிறுவாக நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுக்க தான் தயாராக உள்ளதாகவும் மேலும் தங்களின் அரச நிருவாக செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துளைப்பு வழங்குவதாகவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அரசாங்க அதிபரிடம் தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment