கிரிக்கட் வீரர் மதீஷ பத்திரணவிற்கு இந்தியாவில் விருது வழங்கப்பட்டுள்ளது.........
பிஹைன்ட்வுட்ஸ் கோல்டன் ஐகொன் (Behindwoods Gold Icon) விருது வழங்கும் நிகழ்வில் மதீஷவிற்கு இவ்வாறு விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கட் வீரர்கள், மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கட் வீரர்களுக்கு ஏற்கனவே இந்த விருது வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2024ம் ஆண்டுக்கான பிரபலமான விளையாட்டு நட்சத்திரமாக மதீஷ பத்திரண தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரபலமான விளையாட்டு நட்சத்திரம்:
மதீஷ, இந்திய பிரிமியர் லீக் போட்டித் தொடரில் சென்னை சுபர் கிங்ஸ் அணியின் சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஹைன்ட்வுட்ஸ் விருது வழங்கும் விழாவில் சினிமா, விளையாட்டு பல்வேறு துறைகளில் பிரகாசித்தவர்களுக்கு விருது வழங்கப்படுகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பிரபலமான விளையாட்டு நட்சத்திரமாக மதீஷ பத்திரண தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கான இந்த விருதினை தென்னிந்திய நடிகை ஸ்ரீலீலா வழங்கி இருந்தார். தற்போது தென்னிந்திய நடிகை ஸ்ரீலீலாவுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.
Comments
Post a Comment