மட்டக்களப்பில் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையால், நடாத்தப்படும் செயலமர்வு.....................

 மட்டக்களப்பில் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையால்,  நடாத்தப்படும் செயலமர்வு.....................

மட்டக்களப்பில் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையால்,  அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இருநாள் பயிற்சி செயலமர்வொன்று நடாத்தப்படுகிறது.

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பட்டு சபை பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கும், போதைப்பொருள் அற்ற சமூகத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் கீழ், மாவட்டம் மற்றும் பிரதேச செயலக ரீதியில் சமூகம் சார் பாதுகாப்பு முறைமை தொடர்பாக தெளிவுபடுத்தி வருகிறது.

கிழக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் திட்டத்தின் பிரகாரம், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் புதிதாக நியமனம் பெற்றுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு மற்றும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்தல் தொடர்பாக இருநாள் பயிற்சி செயலமர்வு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

செயலமர்வில் ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது, மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இடம்பெறும், பயிற்சி செயலமர்வில் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பட்டு சபையின் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர் பசில் மொகமட் ரசாக், வெளிக்கள பிரிவு பிரதி பணிப்பாளர் தரிசன மாவட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

Comments