கல்லடி உப்போடை, நொச்சிமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் வருடாந்த மகோற்சவம் ...............

கல்லடி உப்போடை, நொச்சிமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் வருடாந்த மகோற்சவம் ...............

 மட்டக்களப்பு, கல்லடி உப்போடை, நொச்சிமுனையில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானின் வருடாந்த மஹோற்சவம் (03)  நண்பகல் 12.00 மணிக்கு  கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

07.07.2024 அன்று 4ம் குறிச்சி பொது மக்களின் மாம்பழத் திருவிழாவும், 5ம்  குறிச்சி பொது மக்களால் 2024.07.08 அன்று   திருவிளக்குப் பூசையும்,     09.07.2024 அன்று முதலாம் குறிச்சி பொது மக்களால் வசந்த உற்சவமும்,    2024.07.10 அன்று 2ம் குறிச்சி பொதுமக்களால் திருவேட்டை திருவிழாவும்,  11.07.2024 அன்று  3 ம் குறிச்சி பொது மக்களால் தேரோட்ட நிகழ்வும் தீமிதிப்பு நிகழ்வும்  நிகழ்வும் இடம் பெற உள்ளது. 12.07.2024 அன்று   காலை   9.00 மணிக்கு தீர்தோற்சவம் இடம் பெற உள்ளது.

ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சின்னையா கிருபாகரன் குருக்கள் தலைமையில் மகோற்சவ திருவிழா நிகழ்வும் பூஜைகளும் இடம் பெறும்.  சைவ அடியார்கள் அனைவரையும் மஹோற்ச திருவிழாவில் கலந்து கொண்டு விநாயக பெருமானின் திருவருளை பெற்றேகுமாறு ஆலய பரிபாலன சபையினர் அன்புடன் அழைக்கின்றனர்.







Comments