காத்தான்குடியில் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தினால் இரத்ததான நிகழ்வு..............
மட்டக்களப்பு, காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு இன்று நடைபெற்றது. காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் குருதி தேவைப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில், சமூக மேம்பாட்டிற்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் ஹாரிஸ் தலைமையில் இரத்ததான முகாம் நடைபெற்றது.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வைத்திய அதிகாரி வைத்தியர் அலீமா அப்துர் ரஹ்மான், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் எனப் பலரும் இரத்ததான முகாமில் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment