ஏழை மக்களின் ஏழ்மையை ஒழிக்க இந்த திட்டம் அமுல் நடத்தப்படும்: அமைச்சர் அனுஷ பஸ்குவல்

 ஏழை மக்களின் ஏழ்மையை ஒழிக்க இந்த  திட்டம் அமுல் நடத்தப்படும்: அமைச்சர் அனுஷ பஸ்குவல்

(வரதன்) ஏழை மக்களின் ஏழ்மையை ஒழிக்க இந்த  திட்டம் அமுல் நடத்தப்படுவதாகவும் சீராக அமல் நடத்த வேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும் சமூக லுவூட்டல் ராஜாங்க அமைச்சர் அனுஷ பஸ்குவல் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலேயே ஏறாவூர்பற்று  பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, மாவடி வேம்பு சமுர்த்தி வங்கியிலே 7 கோடி வரையிலான பணத்தை கடனுதவி வழங்க மூலதனமாக வைத்துள்ளதுடன், மாவட்டத்தில் முதலாவது இடத்தையும், கிழக்கு  மாகாணத்தில் முதலிடத்தையும், தேசிய ரீதியில் ஒன்பதாவது இடத்தையும் பெற்றுள்ளது என்பது அனைத்து வங்கிகளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இந்த சமுர்த்தி வங்கி செயல்படுவதாகவும்,  அரசாங்கத்தின் சிறப்பான திட்டத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும் என ராஜாங்க அமைச்சர் அனுஷ பஸ்குவல்  இங்கு தெரிவித்தார். 
 அஸ்வெஸ்ம நலன்புரித் திட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் வலுவூட்டல் செய்ய சமூக வலுவூட்டல் அமைச்சு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதற்கு அமைய மாவட்டத்தில் இந்த நலன்புரி திட்டத்தை மேலும் வலுவூட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை கொள்ளும் பொருட்டு சமூக வலுவூட்டல் ராஜாங்க அமைச்சர் அனுஷ பஸ்குவல் இன்று (13) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் திட்டத்தை அமுல்படுத்த செயல்படும் அனைத்து உத்தியோகத்தர்களைக் கொண்ட விசேட கூட்டம் ஒன்றை நடத்தினார்.
 இந்தக் விசேட கூட்டத்தில் சமூக வலுவூட்டத் திட்டத்தை மேலும் வலுவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் பற்றி இங்கு ஆராயப்பட்டது. இத்திட்டத்தை நடத்துவதற்குறிய சாத்தியம் பற்றி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய தேவையான ஆலோசனைகளும் உயர் அதிகாரிகளால் வழங்கப்பட்டது.
 இதன் போது கருத்து வெளியிட்ட ராஜாங்க அமைச்சர் ஜனாதிபதி  எண்ணத்தில் இத்திட்டம் நடைபெற படுத்தப்படுவதாகவும்,  சீராக நடத்த வேண்டும் என்பதில் ஜனாதிபதி  மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் உள்ளிட்ட சமுர்த்தி நலம்புரி திட்டத்தின் பங்குதார திணைக்களங்களில் உயர் அதிகாரிகள் பலரும் இங்கு பிரசன்னமாக இருந்தனர்.








Comments