கிரான், கோரகல்லிமடு கிராமத்தில் தற்காலிக உபதபால் அலுவலகம் திறந்து வைப்பு............
மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவு கோரகல்லிமடு கிராமத்தில் மக்களின் நன்மை கருதி, தற்காலிக உபதபால் அலுவலகம் இன்று (15) திறந்து வைக்கப்பட்டது.
பிரதேச மக்கள் தங்களது அஞ்சல் சேவை வசதிகளை பெற்றுக் கொள்ளும் முகமாக வர்த்தக வாணிப கனியவளங்கள் இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனினால் உப தபாலகம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
அதிதிகளாக கிழக்கு மாகாண பிரதி தபால் மாஅதிபர் எம்.எச்.அஸ்லம், மட்டக்களப்பு தபால் மா அதிபர் எஸ்.ஜெகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment