மட்டக்களப்பு தன்னாமுனையில் வீதி நடுவே குடைசாய்ந்த முச்சக்கரவண்டி........
(கடோ கபு) வாழைச்சேனை செம்மண்ணோடையைச் சேர்ந்த நபரொருவருக்கு சொந்தமான முச்சக்கர வண்டி தன்னாமுனையில் விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் சென்ற இரு இளைஞர்கள் காயமடைந்ததுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து சம்பவிப்பதற்கு பிரதான காரணமான கார் அவ்விடத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளதுடன், இப் விபத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் சிக்கிக்கொண்டது, அதில் பயணம் செய்த நபரின் கால் ஒன்றிலும் முறிவு ஏற்பட்டதுடன், அவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Comments
Post a Comment