வாழைச்சேனையில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது...............
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுரியா நகர் பகுதியில் ஆயுதங்களுடன் செவ்வாய்க்கிழமை இரவு (30) நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விஷேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர்களுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போதே ஆயுதங்களுடன் 43 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ரி-56 ரக இரு துப்பாக்கிகள், ஒரு வாள், துப்பாக்கி ரவைகள் 60, மெகசீன் 2 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், கைது செய்யப்பட்ட நபரையும், ஆயுதங்களையும் வாழைச்சேனை பொலிஸார் நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment