மட்டக்களப்பு மாவட்டத்தில் அஸ்வஸ்ம பயனாளிகளை மேம்படுத்தும் நோக்குடன் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் பயிற்சி............

 மட்டக்களப்பு மாவட்டத்தில் அஸ்வஸ்ம பயனாளிகளை மேம்படுத்தும் நோக்குடன்  இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் பயிற்சி............

மட்டக்களப்பு மாவட்டத்தில் அஸ்வஸ்ம பயனாளிகளை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் 14 பிரதேச செயலகங்களிலும் உள்ள  இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் பயிற்சி  வேலைத்திட்டம் நடைபெற்று வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் S.ராஜ்பாபு அவர்களின் ஏற்பாட்டில் அந்தந்த பிரதேச செயலாளர்களின் வழிகாட்டலின் கீழ் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள  முகாமையாளர்களின் மேற்பார்வையில் நடைபெற்று வரும் இப்பயிற்சிநெறிகளுக்கு,  வளவாளர்ளாக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு இளைஞர் யுவதிகளை நெறிபடுத்தி வருகின்றனர். வளவாளரினால் இளைஞர் யுவதிகளுக்கான உளபகுப்பாய்வு படிவமும் பூர்த்தி செய்யப்பட்டடு வருவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். 










Comments