மட்டக்களப்பு, இலுப்படிச்சேனை, வாழைக்காலை கிராமத்தில் அறநெறி பாடசாலையின் ஆரம்ப நிகழ்வு.............
மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேசத்தின் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில், இலுப்படிச்சேனை, வாழைக்காலை கிராமத்தில் முத்துலிங்க பிள்ளையார் அறநெறி பாடசாலை ஆரம்ப நிகழ்வு (07) நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வானது ஆலய பூஜைகளுடன் ஆரம்பமாகி, நந்திக்கொடி ஏற்றப்பட்டதையடுத்து அறநெறி கீதம் இசைக்கப்பட்டது. முத்துலிங்க பிள்ளையார் ஆலய தலைவர் நல்லதம்பி லவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் என்.சத்தியானந்தி அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
நிகழ்வில் மாணவர்களுக்கு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஒரு தொகுதி புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
Comments
Post a Comment