பாடுமீன் சமரில் சிசிலியாவை பந்தாடிய .வின்சன்ட் .....................

பாடுமீன் சமரில் சிசிலியாவை பந்தாடிய வின்சன்ட் .....................

(கடோ கபு) மட்டக்கப்பில் இயங்கும் பெண்கள் பாடசாலைகளுள் முதன்மையான பாடசாலையாக திகழ்ந்துவரும் மட்/வின்சன்ட் பெண்கள்  உயர்தர  பாடசாலை மற்றும் மட்/சிசிலியா பெண்கள் பாடசாலை அணிகளுக்கிடையிலான வருடா வருடடம் நடத்தப்பட்டு வரும் பாடுமீன் சமர் என்று வர்னிக்கப்படும் மென்பந்து கிறிக்கெட்  தொடரின் 11வது அத்தியாயம் இன்று (06) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் மட்/வின்சன்ட் பெண்கள் உயர்தர பாடசாலை முதல்வர் தலைமையில் இடம்பெற்றிருந்தது. 

இக் கிறிக்கெட் தொடருக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு  அரசாங்க அதிபர் ஜஸ்டினா யுலேகா  முரளிதரன் அம்மணி அவர்கள் அழைக்கப்பட்டிருந்ததுடன் சிறந்த ஏற்பாடுகளுடன் போட்டி மிகப் பிரமாண்டமாய் இடம்பெற்றது.

மிகுந்த எதிர்பார்ப்பை இம்முறை ஏற்படுத்திய தொடராக 2024 பாடுமீன் சமர் அமைந்திருந்தது. நடப்புச் சம்பியனை தக்கவைக்கும் கனவுடன் வின்சன்டும் கடந்த வருட தோல்விக்கு பழிதீர்க்கும் நோக்குடன் சிசிலியாவும் களம் நுழைந்திருந்தமையினால் இத் தொடர் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது எனலாம். 

20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டித்தொடராக அமைந்த இத் தொடரில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிசிலியா மகளீர் அணி களம் நுழைந்திருந்த நிலையில் ஆரம்பம் முதலே  அணியின் விக்கட்கள் தகர்கப்பட நிலைகுலைந்து போன சிசிலியா அணி ஒரு கட்டத்தில் 30 ஓட்டங்களுக்கு 5 விக்கட்களை இழந்து தட்டுத்தடுமாறியது இருந்தும், பலம் வாய்ந்த மத்திய வரிசை வீராங்கனைகளும், பின்வரிசை வீராங்கனைகளும் சிசிலியா அணிக்கு கைகொடுத்து அதிரடி காட்ட ஆட்டத்தின் போக்கு மாறி யாரும் எதிர்பார்க்காத வகையில் 142 ஓட்டங்களை குவித்து மைதானத்தில் குழுமியிருந்தோருக்கு  அதிர்ச்சி கொடுத்து 143 எனும் வலுவான வெற்றியிலக்கை வின்சன்ட் அணிக்கு நிர்ணயித்தனர் சிசிலியா அணியினர்.

143 என்கின்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட வின்சன்ட் அணி வீராங்கனைகள் ஆரம்பம் முதலே நிதானம் கலந்த அதிரடியுடன் வெற்றியிலக்கை நோக்கிய துடுப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர் இருந்தும், ஒருகட்டத்தில் 18 பந்துகளுக்கு 25 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற கள நிலவரமும் காணப்பட்டது இவ் இக்கட்டான சூழ்நிலைகளையெல்லாம் தகர்த்தெறிந்து 7 விக்கட்களால் 11 பாடுமீன் சமர் கிண்ணத்தை கைப்பற்றியது வின்சன்ட் அணியினர். 

இரு பாடசாலைகளின் மாணவிகள் பழைய மாணவிகள் என பெருமளவிலானோர் வெபர் மைதானத்தில் குழுமியிருந்து போட்டியினை கண்டு களித்ததுடன் தங்களது அணிகளுக்கு ஆதரவினை வழங்கி 2024 பாடுமீன் சமரை அட்டகாசப்படுத்தி வேற லெவலுக்கு கொண்டு சென்றிருந்தர். 

போட்டியின் நிறைவில் பிரதம அதிதிகளால் வெற்றிக்கிண்ணம் வழங்கப்பட்டதுடன் சிறப்பாட்டக்காரர் சிறந்த துடுப்பாட்ட வீரர் சிறந்த பந்துவீச்சாளர் அதிக ஆறு ஓட்டங்களை விளாசியோருக்கான கிண்ணங்களும் .







Comments