மட்டக்களப்பில் ஆற்றுமணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொண்டவர்களுடனான கலந்துரையாடல்............

 மட்டக்களப்பில் ஆற்றுமணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொண்டவர்களுடனான கலந்துரையாடல்............

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆற்றுமணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களை பெற்றுள்ளவர்களுடனான கலந்துரையாடலும் விழிப்புணர்வு கருத்தரங்கும் (19) அன்று  பழைய மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

சுற்றாடல், வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் கருத்தரங்கு இடம்பெற்றது. சட்ட விரோத மண் அகழ்வுகளை தடுக்கும் வகையில் புவிச்சரிதவியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மண் அகழ அனுமதிகள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. கலந்துரையாடலில் புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள், சுற்றாடல் திணைக்கள அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.








Comments